நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, May 26, 2019

சிறுமி துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் ; அதிபர் பதவி துறப்பதாக அறிவிப்புவவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்களை பெற்றோர் பழையமாணவர்கள் இன்று எழுப்பிய நிலையில் அதிபர் தனது பதவியில் இருந்து விலகிச்செல்வதாக பொதுச்சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இன்று காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அதிபர்  தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் அண்மையில் மாணவியொருவருக்கு காவலாளி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயன்றமை சபையில் பகிரங்கமாக பாடசாலையின் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் காவலாளி தொடர்ந்தும் பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் அதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சபையில் அனைவரும் குழப்பமடைந்து அதிபருக்கு எதிராக கோசமெழுப்பிய நிலையில் பெண் ஆசிரியர்கள் பலரும் ஆண் ஆசிரியர்கள் சிலரும் அதிபருக்கு ஆதரவாகவும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு ஆதரவாகவும் கோசங்களை குரல் எழுப்பியவாறு சபையின் நடுவே வந்தனர்.

இதன் போது ஆசிரியர்களுக்கு எதிராகவும் பாடசாலைக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சம் கொள்வதாகவும் தெரிவித்து பெற்றோர் கோசங்களை எழுப்பியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்களையும் அதிபரையும் வெளியேறுமாறும் அதிபரை பதவியில் இருந்து விலகுமாறும் கோரினர்.

இந் நிலையில் அதிபர், குறித்த சம்பவம் பதிவில் இருந்த போதிலும் மாணவியும் அவரின் பெற்றோரும் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என தெரிவித்து தான் பொலிஸிலோ ஏனைய இடத்திலோ முறையிடவில்லை என தெரிவித்தார். அத்துடன் இனி தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் பெற்றோர் அதிபரின் செயற்பாடு பிழை எனவும் பொலிஸிடம் முறையிட்டு பொலிஸே நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்ததுடன் அதிபரே முதல் குற்றவாளியெனவும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களும் குற்றவாளிகளே என தெரிவித்து சபையில் நியாயத்தினை கேட்டு நின்றனர்.

இந் நிலையில் பாடசாலையில் பல பண மோசடிகள் இடம்பெறுவதாக பழைய மாணவர்கள் சங்கத்தால் குற்றச்சாட்டுக்கள் அடுக்கிக்கொண்டு சென்றபோது பழைய மாணவரும் பெற்றோருமான ஒருவர் இதனை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதனை முதலில் ஏற்றுக்கொண்ட அதிபர் தான் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்த நிலையில் குழு நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது தான் இன்றில் இருந்து குறித்த பதவியில் இருக்கப்போவதில்லை எனவும் தான் அதிபர் பதவியில் இருந்து விலத்துவதாகவும் தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிலர் அதிபரின் முடிவை வரவேற்றதுடன் புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கூட்டத்தினை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.

1687 அரபு மத்ரஸாக்களில் உள்ள 2161 வெளிநாட்டு போதகர்கள், ஐ.எஸ். தொடர்புள்ளவர்களா?


இலங்கையில் காணப்படும் 1687 இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளில் பாட போதனைகள் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார திணைக்களம் மற்றும் அதன் அமைச்சு என்பவற்றின் அனுமதியின் கீழ் வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் 2161 பேர் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்துள்ள சமய போதகர்கள் இடையே பயங்கரவாத ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்களா? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறாதுள்ளதாக இன்றைய சகோதர வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

தங்கியிருப்பதற்கான வீசாவுடன் வரும் இந்த இஸ்லாமிய போதகர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அவர்களது பின்னணிகள் குறித்து பாதுகாப்பு அறிக்கை கூட பெறாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் மத்ரஸா பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ள அம்பாறை, திருகோணமலை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று விடுகின்றனர்.

இங்கு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என எந்தவித விசாரணைகளும் இடம்பெறாதுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் நான்கு பேர் தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த விரிவுரையாளர்களை இந்நாட்டுக்கு அழைத்துவர தலையிட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி அதில் கூறப்பட்டுள்ளது

முன்பள்ளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு!


கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிபொருள்களுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் அவர்களில் ஒருவர் கட்டடத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்தக் கட்டடத்திலிருந்து C 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிபொருள் 168 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வயர்கள், டெட்டனேட்டர், தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பிரிவினைவாத மத புத்தகங்கள் 5 என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில் 26ஆம் திகதியான இன்றும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படையினரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், 24 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கெக்கிராவ கொவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி


நாட்டில் ஏற்பாட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில்   இனவாதக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதுடன், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கெதிராகவும் மேற்கொண்டு வரும் இனவாதக்கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும். அதையும் மீறி இனவாதக்கருத்துக்களைப் பரப்பி நிம்மதியாக வாழும் தமிழ், முஸ்லிம் இனங்களை மோத விட்டு அரசியல் செய்ய எத்தனிக்கும் பராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரனை அரசு கைது செய்ய வேண்டுமென கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுப்போன அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து முஸ்லிம்களும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு வகையில் நெருக்குவாரங்களை எதிர்கொண்டு வருகின்ற அதே வேளை, பல பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பொருளாதார, உயிரழிவுகள், வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல், கலாசார ரீதியான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்நாட்டில் சமாதனத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டிய மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் இனமுரண்பாட்டைத் தோற்றுவித்து வரும்   எதிர்கால சதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
 முஸ்லிம் அரசியல்வாதிகளை முழு நேரமாக விமர்சிப்பதும் முஸ்லிம் பிரதேசங்களில் அத்துமீறி நுழைந்து அதிகாரம் செலுத்த முற்படுவதுமாகும்.
தொடர்ந்தும் பாராளுமன்ற உரைகளிலும் ஊடக அறிக்கைகளிலும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான அமைச்சர் றிஷாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோரை விமர்சித்து வருவதுடன், பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தியும் அறிக்கைகள் விட்டும், அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
கிழக்கு ஆளுநர் நியமனத்தை இனவாதமாக மக்கள் மயப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டு மூக்குடைந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தற்போது ஆளுநரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கெதிராக வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களைப் பரப்பி வருகிறார்.
இப்பல்கலைக்கழகம் தொடர்பில் நாட்டின் தலைமை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே தெளிவான அறிவிப்பொன்றை விடுத்துள்ள நிலையிலும், கோப் குழுவின் கள விஜயத்தின் பின்னரும் உண்மைகளை உணர்ந்து, யதார்த்தங்களை ஜீரணித்து இனவாத ரீதியான விமர்சங்களை கைவிட வேண்டும்.
அதே நேரம் தொடர்ந்தும் நாட்டின் சட்டத்தையும் மீறி இனமுறுகலைத் தோற்றுவிக்கும் நோக்கில் நடவடிக்கைளை முன்னெடுக்கும் பட்சத்தில், கைது செய்யப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் நாட்டில் மீண்டும் பயங்கரவாத நிலைமை ஒழிக்கப்படும்.
இவ்வாறான இனவாதம் பேசும்  அரசியல்வாதிகள் தமிழினத்திற்கே சாபக்கேடு. இதனாலேயே அதனை உணர்ந்த தமிழ் அரசியல் தலைமை மதிப்பிற்குரிய ஆர்.சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை கட்சியை விட்டு நீக்கியுள்ளது பாராட்டத்தக்கது.
அதே நேரம், முஸ்லிம் அரசியல்வாதிகள் விமர்சிக்கும் இவர்களால் தமிழ் மக்களும் தமிழ் பிரதேசங்களும் கண்ட  முன்னேற்றங்கள் தான் என்ன? என்று கேட்டால், பூஜ்ஜியமே.  
அதே நேரத்தில், முஸ்லிம் அரசியவாதிகளால் தான் தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது என்பதை இனவாதம் பேசும் குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓயாது விமர்சிக்கும் தமிழ் அரசியல்வாதி வியாழேந்திரன் உணர்ந்து கொள்ள வேண்டும் .
மேலும், மட்டு மாவட்டத்தில் விகிதார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு காணி சரியான பங்கீடு வழங்கப்படாமல் அநீதியிழைக்கப்படுள்ள நிலையில், கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் காணி விடயங்களில் தேவையற்ற விதத்திலும் சம்பந்தமில்லாமலும் மூக்கை நுழைத்து எஞ்சியுள்ள சிறு நிலப்பரப்பினையும் கையகப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஈடுபட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.
கல்குடா முஸ்லிம் பிரதேசத்திலுள்ள மக்கள் போதியளவு குடிப்புக்காணி இன்மையால் சுகாதார மற்றும் பல்வேறு வகையில் பல அசெளகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இவ்வாறான தலையீடுகளை மேற்கொண்டு அவைகளையும் கையகப்படுத்தி இப்பிரதேச முஸ்லிம்களுக்கு நெருக்குவாரங்களைக் கொடுக்க முனைவதை  இனி மேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய ஆர்.சம்பந்தன் ஐயா அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் போன்றோரும் முஸ்லிம்களின் விடயத்தில் யதார்தங்களைப் புரிந்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரனின் கருத்துக்கும் முன்னெடுப்புக்களும் மனவேதனையளிப்பதாகவுள்ளது என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல்.அஸ்மி   வெளியிட்ட அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்துக்கு நெருக்கடி- மஹிந்த ராஜபக்ஸ


அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வழி உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரசாங்கத்திலுள்ள கிறிஸ்தவ அமைச்சர்கள் எவரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்தால், அவர்களது சமூகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும்.

இந்த நிலைமையினால் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. சுட்டிக்காட்டினார்.

நாடு முகம்கொடுத்துள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே மிக முக்கியமான தேவையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தை நடாத்திய தர்கா நகர் இளைஞர்கள் 3 பேர் கைது


“தர்கா டவுன் பிரேகிங் நியுஸ்” எனும் பெயரில் 100 உறுப்பினர்களுடன் நடாத்தப்பட்டு வந்த “வட்ஸ்அப்” சமூக ஊடகத்தின் உரிமையாளர் உட்பட மற்றுமிருவர் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 இற்கும் 23 இற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சமூக ஊடகத்துடன் தொடர்புடைய 25 பேர் இன்று (26) அந்த ஊடகத்திலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த வட்ஸ்அப் சமூக ஊடகத்தை கடந்த 3 வருட காலமாக நடாத்தி வரும் இளைஞர்கள் 23 வயதுடைய ஒருவர் எனவும், இவர் வெளிநாட்டில் சில காலம் வேலைபார்த்துவிட்டு வந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் 3 பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த பயங்கரவாத தாக்குதல் குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர் கைது- பொலிஸ்


பயங்கரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் இலக்கு அடுத்த பொசோன் போயா தினத்துக்கு முன்னர் எனவும், அந்த இலக்கு பயங்கரமானதாக இருக்கும் எனவும் தெரிவித்து துண்டுப் பிரசுரம் ஒன்றை இரத்தினபுரி நகரில் விநியோகித்துக் கொண்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இரத்தினபுரி கெடலியன்பல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் அவருக்கு கிடைக்கப் பெற்ற விதம் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

சிங்கள இனத்தவரான இவர், இந்த தகவல்களை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்காமல், துண்டுப் பிரசுரம் ஊடாக வெளிப்படுத்தியது, யாரின் தேவையை நிறைவேற்றுவதற்கு என்பது தொடர்பிலும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சகோதர செய்தி ஊடகமொன்று அறிவித்துள்ளது.  

Saturday, May 25, 2019

பிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…


“யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு முஸ்லிம்கள் மறறும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகின்றது. குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது நானும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அங்கதவராக பணியாற்றிய ஒருவன் என்ற அதற்கான காரணத்தினை நன்கு அறிந்திருந்தேன்.

வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் அன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். விசேடமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனமுறுகலொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த முறையில் திட்டமிட்டே அத்தகைய முடிவொன்றை எடுத்திருந்தார்.

தற்போதை அர்த்தப்படுத்தல்களின் பிரகாரம் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால் பலம்பொருந்திய கட்டமைப்பினைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு வடக்கில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் அழிப்பதற்கு இருபது விநாடிகள் போதுமாக இருந்தது.

ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டிருந்தமையால் தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தினை பேணுவதற்காகவே அந்த செயற்பாடு இடம்பெற்றிருந்தது.

அதேநேரம் காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களில் பல மர்மங்கள் உள்ளன. அதேபோன்று முஸ்லிம்களால் பல தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே பழைய விடயங்களை மீண்டும் கிளறிப்பார்க்க வேண்டியதில்லை. இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களும் சிறந்த வெளிப்பாடுகளையே காட்டிவந்துள்ளார்கள். தற்போது வரையில் அதனை பேணிக்கொண்டே வருகின்றார்கள்.
மேலும் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமயத்தவர்களை மையப்படுத்தியே தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதனை விடுதலைப்புலிகள் மற்றும் முஸ்லிம் தரப்புக்கிடையிலான விடயத்தினை மையப்படுத்தி ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆரசியல் குளிர்காய நினைப்பவர்களே விடுதலைப்புகளை இத்தாக்குதலுடன் தொடர்பு படுத்த முனைகின்றார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் விடயத்தினை தவிர்த்து, சர்வதச தீவிரவாதம் என்ற அடிப்படையில் நோக்கினால் தான் இதனை முற்றாக களையலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம்சாட்ட முடியாது. நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது.

முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது. இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன். அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார். மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை.

என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்  வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்  தெரிவித்துள்ளார்.

கேள்வி:- ஈஸ்டர் தாக்குதல்கள் நிறைவடைந்து ஒருமாதமாகின்ற நிலையில் கிழக்கு மாகாண அன்றாட நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்:- தாக்குதல்கள் நடைபெற்று சரியாக ஒருமாதம் நிறைவடையும் தருணத்தில் கிழக்கு மாகாணம் மட்டுமன்றி முழு இலங்கையுமே அச்சமான சூழலுக்குள்ளே இருக்கின்றது. தேசிய அளவில் ஊடுருவப்பட்டு இத்தகைய தாக்குதலொன்று நடத்தப்பட்டிருப்பதை அரசாங்கம், புலனாய்வு, படைத்தரப்பினர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதும், வேதனையானதுமான விடமாகும்.

அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறே இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாகவும் இருக்கின்றது. எந்தவிமான இலக்குமற்ற சர்வதேச முஸ்லிம் தீவிரவாதத்தின் பிடிக்குள் இலங்கையும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு கூட மிகுந்த அச்சமாகியுள்ள நிலைமை தான் உள்ளது.

கேள்வி: ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை திட்டமிடுவதற்கு குறிப்பிட்ட காலம் அவசியப்பட்டிருக்குமல்லவா?

பதில்:- விடுதலைப்புலிகள் கூட தங்களது தாக்குதல்களை வெசாக்ரூபவ் ஈஸ்டர் அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடும் தருணங்களில் மேற்கொள்வது கிடையாது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் அவ்வாறு இல்லை. பொதுமக்களை இலக்குவைத்து திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கின்றது.

தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் கல்விகற்ற, செல்வந்தர்களே பங்கேற்றுள்ளார்கள். அவர்களின் மத்தியில் ஏற்பட்ட சிந்தனையில் இருந்து தான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது இந்த தாக்குதல்களுக்கான திட்டமிடல்களுக்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும்.

கேள்வி:- இலங்கைக்கு தொடர்ந்தும் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றதா?

பதில்:- அரசாங்கமும், படைத்தரப்பும் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் கைதுகளைச் செய்து விசாரணைகளைச் செய்கின்றோம் என்று கூறினாலும் சர்வதேச ஒத்துழைப்புடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் அதுகுறித்த விடயங்களை முழுமையாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரையில் தொடர்ந்தும் அச்சுறுதல் காணப்படுகின்றது என்று தான் கூறவேண்டியுள்ளது.

கேள்வி:- தாக்குதல்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத்தரப்பினால் முன்கூட்டியே அறியப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்:- போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாக இலங்கைத்தீவிலே எந்தவிதமான வெடிச்சத்தங்களுக்கே இடமிருந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் 2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் தேசிய பாதுகாப்பு நலிவுற ஆரம்பித்தது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் முழுமையாக உடைத்தெறியப்பட்டன. வாராவாரம் நடைபெறும் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் பிரதமர் ஆறுமாதமாக அழைக்கப்படவில்லை என்று தற்போது கூறுகின்றார். தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறுவதலிருந்து விலகுவதற்காக தற்போது எனக்குதெரியாது என்று கூறி பந்துபரிமாற்றமே செய்கின்றார்கள்.

ஏப்ரல் 11ஆம் திகதி பொலிஸ்தலைமையகத்திலிருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அதில் கிழக்கினைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களே தாக்குதல்களை நடத்தப்போகின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் பிரபுக்களின் பாதுகாப்பு கட்டமைப்புள்ள அனைவருக்கும் அனுப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் தற்போது யாருக்கும் தெரியாது என்று கூறுவதும் ஜனாதிபதி, பிரதமர் தமக்குத்தெரியாது என்று கையை விரிப்பதும் தான் வேடிக்கையாக இருக்கின்றது.

கேள்வி:- பாதுகாப்புக்கான எச்சரிக்கை கடிதம் உங்களுக்கு கிடைத்தவுடன் அதுகுறித்த எவ்விதமான நடவடிக்கைகையையும் எடுக்கவில்லையா?

பதில்:-  பொலிஸ் தலைமையத்திலிருந்து பிரபுக்கள் பாதுகாப்பான பிரிவினால் தான் அந்த்கடிதம் எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அனுப்பட்டிருந்தது. அவர்கள் அக்கடிதத்தினை என்னிடம் காட்டினார்கள். அவர்கள் குறித்த தினத்தில் என்னை வெளியில் செல்வதை தவிர்த்திருக்குமாறு கோரினார்கள். எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பட்டினையே அவர்கள் மேற்கொண்டார்கள்.

கேள்வி:- கிழக்கைச் சேர்ந்த இருவர் தாக்குதலில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டிருந்ததாக கூறினீர்களே?

பதில்:- ஆம், குறித்த கடிதத்தில் புதிய காத்தான் குடியைச் சேர்ந்த இரு முஸ்லிம் நபர்களான சஹ்ரான், ரில்வான் ஆகியோர் தாக்குதலில் ரூடவ்டுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எங்கு தாக்குதல்களை செய்யப்போகின்றார்கள் என்ற தகவல்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது.

கேள்வி:- கிழக்கினைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபடப்போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில் நீங்கள் அம்மாகாணத்தினைச் சேர்ந்தவர், ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதுகுறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியுமல்லாவா?

பதில்:- பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பின் தலைமை அதிகாரியால் அப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கட்டளையே அதுவாகும். அதுகுறித்து நாம் கேள்விகளை எழுப்ப முடியாது. ஆனால் எட்டு மாதங்களுக்கு முன்னதாக நான் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தேன்.

கேள்வி:- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்ற விடயத்தினை எந்த அடிப்படையில் முன்வைத்திருந்தீர்கள்?

பதில்:- அரசாங்கம் நாட்டின் தேசிய புலனாய்வுக்கட்டமைப்பினை உடைக்கின்றார்கள். இதனால் தேசிய பாதுகாப்பு பாரிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதுமட்டுமன்றி இலங்கையினுள் ஐ.எஸ் தீவிர ஊடுருவல்கள் இருந்துள்ளதாகவும் காத்தான்குடியை மையப்படுத்திய சில அமைப்புக்களின் போக்குகளில் மாற்றங்கள் காணப்படுகின்றதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் அவை குறித்து அரசாங்கம் கவலையீனமாகவே இருந்துள்ளது.

கேள்வி:- இத்தாக்குதலுக்கு எத்தகைய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன? அவற்றை உள்நாட்டில் இலகுவாக உற்பத்தி செய்திருக்க முடியுமா?

பதில்:- தீவிரவாதத்தின் முதலாவது தாக்குதலுக்கே விடுதலைப்புலிகள் மற்றும் படையினர் பயன்படுத்திய அதியுச்ச சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. படையினர் பயன்படுத்தும் ஆர்.டி.எக்ஸ் மற்றும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சி -4 ஆகிய வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பாரியளவில் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக இந்த வெடிபொருட்கள் வெளிநாட்டிலிருந்து தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த முழுமையான தகவல்களை பெறவேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- கிழக்கில் வஹாப் சிந்தனை தலைதூக்கப்பட்டு தற்போது மதத்தின் பெயரால் தீவிரவாதமாக உக்கிரமடைந்துள்ளது என்ற கருதுகோளை ஏற்கின்றீர்களா?

பதில்:- இதனை விரிவாக பார்த்தால், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு முஸ்லிம்கள் மறறும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகின்றது. குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது நானும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அங்கதவராக பணியாற்றிய ஒருவன் என்ற அதற்கான காரணத்தினை நன்கு அறிந்திருந்தேன்.

வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் அன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். விசேடமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனமுறுகலொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த முறையில் திட்டமிட்டே அத்தகைய முடிவொன்றை எடுத்திருந்தார்.

தற்போதை அர்த்தப்படுத்தல்களின் பிரகாரம் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால் பலம்பொருந்திய கட்டமைப்பினைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு வடக்கில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் அழிப்பதற்கு இருபது விநாடிகள் போதுமாக இருந்தது.

ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டிருந்தமையால் தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தினை பேணுவதற்காகவே அந்த செயற்பாடு இடம்பெற்றிருந்தது.

அதேநேரம் காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களில் பல மர்மங்கள் உள்ளன. அதேபோன்று முஸ்லிம்களால் பல தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே பழைய விடயங்களை மீண்டும் கிளறிப்பார்க்க வேண்டியதில்லை. இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களும் சிறந்த வெளிப்பாடுகளையே காட்டிவந்துள்ளார்கள். தற்போது வரையில் அதனை பேணிக்கொண்டே வருகின்றார்கள்.

மேலும் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமயத்தவர்களை மையப்படுத்தியே தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதனை விடுதலைப்புலிகள் மற்றும் முஸ்லிம் தரப்புக்கிடையிலான விடயத்தினை மையப்படுத்தி ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆரசியல் குளிர்காய நினைப்பவர்களே விடுதலைப்புகளை இத்தாக்குதலுடன் தொடர்பு படுத்த முனைகின்றார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் விடயத்தினை தவிர்த்து, சர்வதச தீவிரவாதம் என்ற அடிப்படையில் நோக்கினால் தான் இதனை முற்றாக களையலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம்சாட்ட முடியாது. நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது.

கேள்வி:- காத்தான்குடி, ஏறாவூர் சம்பவங்களின் பின்னர் ஹிஸ்புல்லா முஸ்லிம்களின் பாதுகாப்பதற்காக இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருந்தார் என்பதை நீங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அறிந்திருந்ததா?

பதில்:- ஆம், அது வெளிப்படையான தகவல். ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் முஸ்லிம் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமே ஆயுதங்களை வழங்கியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் பெண்கள் பதிப்புக்குள்ளானார்கள்.

கேள்வி:- ஹிஸ்புல்லா தனது தலைமையில் மீராவோடை, மாஞ்சோலை கிராமங்களில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகள் அவரை இலக்கு வைத்ததாக கூறுகின்றரே?

பதில்:- முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது. இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன். அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார். மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை.

கேள்வி:-  கிழக்கு ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி என அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நீண்ட காலமான நட்பு உறவுகள் எனக்கு உள்ளன. ஆனால் அரசியல் ரீதியாக முஸ்லிம் ஏகாதிபத்தியத்தினை நான் எதிர்த்தே வந்திருக்கின்றேன்.

ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டவுடன் அதற்கு எதிராக கையெழுத்து வேட்டையை நடத்தினேன். இரண்டாயிரம் கையொப்பத்துடன் அவரை நீக்கும் கோரிக்கையை ஜனாதிபதி,பிரதமருக்கு அனுப்பி வைத்தபோதும் அதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. முன்னதாக பல்கலைக்கழகத்தினை நிர்மானிப்பதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோதே நான் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தேன்.

ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி காணி சுவீகரிப்புக்கள், அரச நியமனங்களை பெருமளவில் செய்து வருகின்றார். குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் கைலாகு கொடுத்திருக்கின்றார். ஓட்டமாவடியில் இந்துக்கோவிலுக்கான காணி சுவீகரிப்பு, அமைச்சு அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றியமை ஆகியவற்றை பகிரங்கமாகவே மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அதிகாரத்தினை கோலோச்சுவதற்காக பயன்படுத்தும் ஒருவர் ஆளுநராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இத்தனை விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்தோம் அவர் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றார். அதற்கான பின்னணியை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கேள்வி:- ஒக்டோபர் 26 அரசியல் புரட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்தமையின் எதிரொலியாகவே கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அதுவொரு புறமிருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைபிடமும் தவறுகள் உள்ளன. கிழக்கில் தீவிரவாதம் தோன்றுவதற்கு கூட்டமைப்பே அத்திவாரமிட்டது. கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸிடம், 11ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு ஆட்சியைக் கையளித்தது. ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராகி பாரிய ஆதிக்கத்தினைச் செலுத்தினார்.

அப்போது கூட்டமைப்பு தட்டிக்கேட்கவில்லை. குண்டுத்தாக்குதலின் பின்னரே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குரலெழுப்புகின்றார்கள். அன்று நாங்கள் வீதியிலிறங்கிப்போரடிய போது இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். கருத்துக்களை முன்வைப்பதற்கு திராணி இருந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சரி அதிலிருந்து வெளியேறியவர்களும் சரி தவறுகளைச் செய்துவிட்டு இப்போது கோசமிடுவதால் பயனில்லை. #வேலுப்பிள்ளைபிரபாகரன் #கருணாஅம்மான் #விநாயகமூர்த்திமுரளீதரன் #தமிழீழவிடுதலைப்புலிகள் #ஹிஸ்புல்லா

கொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை!


நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரும் , காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

ஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடு, ஒன்றுகூடுமாறு அழைப்பு


ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு பெற்று விடுதலையான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் இன்று (26) மாலை கண்டி நகரில் விசேட பூஜை (அதிஸ்டான பூஜை) வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

விடுதலையின் பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டதன் பின்னர் இந்த  அதிஸ்டான பூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிஸ்டான பூஜை வழிபாட்டில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் இன்று மாலை தலதா மாளிகைக்கு அருகில் கூடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியது சீனா

பயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீன அரசாங்கம் தளர்த்தியுள்ளது.


சீன நாட்டவர்கள் இனி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம் எனவும், இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது. 

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு மேம்பாட்டு நடவடிக்கையாகும் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே காட்டிக் கொடுத்துள்ளோம்!! யாழ் முஸ்லீம்கள் கூறுகின்றனர்!!


இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய தேவைகள் இல்லை. ஏனெனில் எமது
இனத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க எம்மிடம் பலமான அரசியல் தலைமைகள் உள்ளனர் என
ஜம்இய்யித்துல உலமா சபையின் யாழ், கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் எஸ்.சுபியான்
தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் பூரண சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.
எமக்கு தேவையான விடயங்களை நாம் இலங்கை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றோம். அதிலும்
எமது உரிமைகள் சார்ந்த விடயத்தில் குரல் கொடுக்க எம்மிடம் சரியான முஸ்லிம் அரசியல்
தலைமைகள் உள்ளனர். அவர்கள் கடந்த காலங்களில் எமக்காக பல விடயங்களை அரசுடன் பேசி பெற்றுத்
தந்துள்ளனர்.

தற்போது முஸ்லிம் இனத்தின் பெயரால் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த
தாக்குதல்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. இதனை
அரசும்,பாதுகாப்பு தரப்பினரும் பல தடவைகள் இதனை கூறியுள்ளனர். நாம் ஆரம்ப காலத்தில்
இருந்து பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள். இந்த நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு
சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினருக்கு முஸ்லிம் சமூகத்தினர் காட்டிக்
கொடுத்துள்ளனர். பிடித்தும் கொடுத்துள்ளனர். இதனை அனைவரும் அறிவார்கள்.

நாம் வன்முறையாளர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு தரப்பினருக்கு காட்டிக்
கொடுப்போம். யாழ்ப்பாண மாவட்டத்தினை பொறுத்தவரையில் இங்குள்ள பாதுகாப்பு தரப்பினருடன்
கலந்துரையாடியுள்ளோம். எமது பிரதேசங்களில் யாராவது ஓர் பயங்கரவாதி இருந்தாலும் நாம்
உடனடியாக காட்டிக் கொடுப்போம் என உறுதிமொழி கொடுத்துள்ளோம்.

நாட்டில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய அமைப்பினர் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே
இலங்கைக்குள் உள்ளனர் என கூறியுள்ளோம். இந்த விடயம் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய
ராஜபக்சவுக்கும் தெரியும். எனவே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை திட்டமிட்ட வகையில்
பொய்யான பிரசாரங்களை கூறி வதைத்து வருகின்றனர். அவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றார்.

இறுதி யுத்தகால கசப்புக்களை போக்க முயற்சியுங்கள்: ஸ்டாலினுக்கான வாழ்த்தில் சொல்ல வேண்டியதை சொன்ன விக்கி!


அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இறுதி யுத்த காலப்பகுதியில் தி.மு.கவின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நாசூக்காக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

அன்புள்ள மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்களே!

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் மற்றும் கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். இதற்கு என்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் வழங்குவேன்.

அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றம் பிரதமர் அறிவித்தார்?


வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் பற்றி விளக்கும் கூட்டத்தில் உரையாடிய பிரதமர் இலங்கையில் உருவாகியிருக்கும் அடிப்படை வாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சியாக கல்வி மற்றும் தனியார் திருமணச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமெனக் குறிப்பிட்டுள்ளார் என்று டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மதராசாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆக்கப்படுமென்றும் அறிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 17 ஆக நிச்சயம் செய்ய முனைந்த போது இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் பலத்த எதிர்ப்பினால் அந்தச்சட்ட உருவாக்கம் தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


"வடக்கில் தீவிர பாதுகாப்புச் சோதனைகள் ஏன்?"நாட்டை உலுக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று எண்ண முடியாது. எனவே, மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறுவதை தடுக்க தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆனால், அது மக்களுக்கு அச்சத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தாத வகையில் இடம்பெற வேண்டும்.

ஆயினும், இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் தேவையற்ற முறையில் அதிகரிக்கப்பட்டிருப்பதை அசௌகரியங்களை எதிர்கொண்டவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதனை, தெற்குடன் ஒப்பிடும்போது வடக்கில் கூடுதலாக நடைபெறுவதை உணரமுடிகின்றது. இது குறித்து, நேற்று பாராளுமன்றில், சேனாதிராஜா, டக்ளஸ், சிறிதரன் உள்ளிட்டோரும் அரசை கடுமையாகச்சாடி குற்றம் சாட்டியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பேருந்தில் பயணம் செய்யும் போது ஆனையிறவு, ஓமந்தை உட்பட நான்கு இடங்களில் பயணிகளை இறக்கி அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் இராணுவச் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும், மன்னார் செல்லும் வீதி, மட்டக்களப்பு செல்லும் வீதிகளிலும் பல இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றது. இந்தகைய சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தை தாண்டிய பின்னர் இடம்பெறவில்லை. அத்துடன், தெற்கில் இத்தகைய இறுக்கமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படவில்லை என்று அங்கு சென்று வந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உண்மையில் இதனை தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்பாடு என்றே எண்ண வேண்டியிருக்கின்றது. தமிழர் பகுதிகளில் மட்டும் பயணச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் இவர்கள் எதனைச் சாதிக்கப் போகின்றனர். நாட்டின் அனைத்து மாகாணத்திலும் இந்நடைமுறை இருக்குமாயின், பொதுவான பாதுகாப்புச் செயல்பாடு என்று அதனை நாமும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், இங்கு நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. அதிக குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெற்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின், பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிராத பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கையை ஏன்? தீவிரமாக்க வேண்டும்!.

தாக்குதல்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக புலனாய்வு வேலை பார்த்து முக்கியமான சம்பவங்களை புலனாய்வு செய்வதில் கோட்டைவிட்டு பெரும் தாக்குதலை தடுக்க தவறிய அரசாங்கம், மீண்டும் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு பாதுகாப்புத் தவறைச் செய்ய முயற்சிக்கின்றதா?. அரசு இதனை திட்டமிட்டுச் செய்கின்றதாயின் அது பாதுகாப்பு படைகள் மீதான தமிழர்களது வெறுப்பை அதிகரித்துக் கொள்ளும் செயலாகவே அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் புலனாய்வுத்துறையினர், பாதுகாப்புப் படையினர் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டிருந்த போதிலும் நாட்டுக்குள் புதிதாக வளர்ந்திருக்கும் சர்வதேச பயங்கரவாதத்தை அழிக்க நாட்டின் புலனாய்வுத்துறையை கட்டமைத்து பாதுகாப்பத்துறையினரை பலம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று தமிழர்கள் மனதளவில் முணுமுணுத்தனர். ஆனால், இந்த அரசாங்கம் அத்தகைய எண்ணங்களை எமது மனங்களில் இல்லாமல் செய்து இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கூறும் செயல்களில் தம்மை தொடர்ந்தும் ஈடுபடுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.

எவனே, வடக்கில் பாதுகாப்பு நடைமுறைகள் ஏன் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தொடர்பில் உரிய விளக்கத்தை வழங்கி, அசௌகரியத்திற்குரிய பாதுகாப்புச் சோதனைகளை தளர்த்திக் கொள்ள அரசாங்கம் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அட்டக்குமுறைகளை கைவிட்டு முழு நாட்டையும் பாதுகாக்க பொறுப்புவாய்ந்த முறையில் செயற்பட வேண்டிய தருணம் இது என்பதை பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்.

25.05.2019
#பிரகாஸ்

அசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்- பிரசன்ன


இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டம் எனவும், அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள விகாரையாக இருக்கலாம், முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம், கிறிஸ்தவ ஆலயமாக இருக்கலாம், எதனையும் பாதுகாப்புப் பிரிவுக்கு எந்த நேரத்திலும் சென்று சோதனையிட முடியும். இதற்கு தனியான சட்டங்களை கொண்டு வர முடியாது.

சிங்கள இன மக்களைக் கோப மூட்டக் கூடியவாறு அறிவிப்புக்களை விடுக்க வேண்டாம் என அசாத் சாலி ஆளுநரிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மினுவாங்கொட வன்முறைச் சம்பவம் குறித்து அசாத் சாலி விடுத்த அறிவித்தலின் மூலம், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்.

ஆளுநர் அசாத் சாலி இனவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க இன்று ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!