Breaking News


முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவை தொடர்புகொண்ட ஜனாதிபதி அவருக்கு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வழங்க முன்வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்தொருமைப்பாட்டின்மை காரணமாக காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள ஜனாதிபதி சரத்பொன்சேகாவை தொடர்புகொண்டு அவருக்கு பிரதமர் பதவியை வழங்க முன்வந்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் சரத்பொன்சேகா பிரதமராக நியமிக்கப்பட்டால் அவர் நாட்டை ஆட்சி செய்வதற்கான  பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் தனக்குள்ளது என நிருபிக்கவேண்டியிருக்கும.;

தற்போது பிரதமர் பதவி அமைச்சரவை தொடர்பில் முட்டுக்கட்டை நிலை காணப்படுகின்றது.
புதிய பிரதமர் பதவி மற்றும் இடைக்கால அரசாங்கம் குறித்து கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு இல்லாததன் காரணமாக இந்த நிலை அடுத்த சில வாரங்களிற்கு தொடரக்கூடும்.
டெய்லி மிரர்

No comments

Note: Only a member of this blog may post a comment.