மன்னார் முசலியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்து அருள்பாலித்து கடந்த 10 மாதங்களிற்கு முதல் துஸ்ர சக்திகளால் உடைத்து எறியப்பட்ட “பாசித்தென்றல் குளத்தடி பாலைமரத்தடி பிள்ளையார்” இன்று உருத்திர சேனையால் ஊர் மக்களின் ஆதரவுடன் மீள்பிரதிஸ்ரை செய்யப்பட்டார். குறித்த நிகழ்வில் சிலாவத்துறை விகாராதிபதி அவர்களும் விருப்பத்துடன் பங்குபற்றியிருந்தார்.
குறித்த பிள்ளையார் பன்னெடுங்காலமாக முசலி 32 ஆம் கட்டையில் பாலைமர நிழலில் வீற்றிருந்து பின்பு வீதி புணரமைப்பின் போது வீதியில் இருந்து சற்று பின்பு பீடம் கட்டி வைக்கப்பட்டு மக்களால் வழிபட்டு வரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த பிள்ளையார் காணாமல் ஆக்கப்பட்ட பின்னர் மக்கள் அந்த பீடத்தில் பிள்ளையார் படம் வைத்து வணங்கி வந்த நிலையில் இன்று கருங்கல்லினால் ஆன பிள்ளையார் திருவுருவம் மீள்பிரதிஸ்ரை செய்யப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.