Breaking News



#ஆதாரம்

பிளீஸ் பொறுப்பான அரசியல்வாதியாக நான் சொல்கிறேன்.இதை நிருபித்தால் நான் பதவி விலகுகிறேன்

கஜேந்திரகுமார் 

சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்

இந்திய வம்சாவழி மலையகமக்களின் இலங்கை குடியுரிமை பெறுவது தொடர்பான மசோதாவிற்கு மலையக மக்கள் குடியுரிமை பெற அரசுக்கு எதிராக திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாக்களித்தார் என அவரது பேரனார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டான் தொலைக்காட்சிப்பேட்டியின் போது கூறியிருந்தார்.அவ்வாறு இல்லை என டான் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் கிருஸ்ணா மறுத்தபொழுது அரசுக்கு எதிராக தனது பேரனார் வாக்களித்தார் எனவும் மறுபடியும் கூறியிருந்தார்,
குறித்த வாக்கெடுப்பில் 52 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள் அதில் முக்கியமாக திருவாளர்கள் ஜீ ஜீ.பொன்னம்பலம்,கே.கனகரட்ணம்,வி.நல்லையா,எஸ்.யூ.எதிர்மன்னசிங்கம்,ரி.ராமலிங்கம்,ஏ.எல்.தம்பிஐயா போன்றவர்களும்.,
அரசின் குறித்த மசோதாவிற்கு எதிராக 32 பேரும் அதில் குறிப்பாக திருவாளர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,பி.குமாரசிறி,கே,இராஜலிங்கம்,டி.இராமானுயம்,எஸ்.சிவபாலன்,எம்.சுப்பையா,எஸ்.தொண்டமான்,சி.வன்னியசிங்கம்,வி.வேலுப்பிள்ளை போன்றவர்களும் அரசின் சட்டமசோதாவை கடுமையாக எதிர்த்தும் வாக்களித்திருந்தார்கள் என்பது பாராளுமன்ற சட்ட விவாதங்களின் அதிகாரபூர்வ கையேடான கன்சாட்டில் 592 ஆவது பக்கத்தில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் இந்திய வம்சாவழி மலையக மக்கள் இலங்கைக்குடியுரிமை பெறுவதற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருப்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

குறிப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட சவாலை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

இவ்வாறு இளைஞர்கள் சமூகவலைத்தளத்தில் ஆதாரத்துடன் பதிவுகளை பகிர்ந்துள்ளனர்


No comments

Note: Only a member of this blog may post a comment.