Breaking News


ஒரு இளம் மலையக அரசியல்வாதி மேடையில் பேசும் ஒரு காணொளியை பார்த்து அதிர்ந்தும், வெட்கப்பட்டும் போய் விட்டேன். என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தாய்மரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பேச்சு தற்போது வைரலாகி இருக்கும் சூழ்நிலையில் பாரளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் இதனை தனது முகநூலில் கூறி இருக்கிறார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

(உரையை கேட்டு கைதட்டும் அப்பாவி பாமரர்களை மன்னியுங்கள்..!)

முதலாவது:
சந்தேகமில்லாமல் அது பச்சை தூஷணம்.

இரண்டாவது:
பகிரங்க மேடையில் பேசப்படுகிறது.

மூன்றாவது:
ஒரு தாயை, பெண்ணை இழிவு படுத்தி பேசப்படுகிறது.

நான்காவது:
பகிரங்க கூட்டத்தில், “மயக்க” நிலையில் பேசப்படுகிறது.

ஐந்தாவது:
“இளைய தலைமுறை”, “கற்ற தலைமுறை” என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் படிக்காத பாமரர்கூட பேச தயங்கும் வார்த்தை பிரயோகம்.

இதற்காக, எங்கே போகிறது, மலையகம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி மனந்தளர வேண்டாம்.

முழு மலையகத்தை நோக்கி கேள்வி எழுப்பவும் வேண்டாம்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்..!

சந்தேகமில்லாமல், மலையகம் சிலிர்த்து எழுந்து இன்று முற்போக்கு நடை போடுகிறது.

இவை ஆங்காங்கே இருக்கும் “வேகத்தடை அழுக்குகள்”.

நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்..! என மனோ கணேசன் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வீடியோ கீழே இருக்கிறது



No comments

Note: Only a member of this blog may post a comment.