இலங்கையின் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிதியை பெறுவது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கியின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அடுத்த சில தினங்களில் இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியூ.டி.லக்ஷமன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிதியை பெறுவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற எதிர்பார்க்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாதமளவில் 4.1 பில்லியனாக குறைந்திருந்தது.
அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் பங்களாதேஷூக்கு விஜயம் செய்த போது நிதியை கைமாற்றி கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.