முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்
No comments
Note: Only a member of this blog may post a comment.