Breaking News



யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகிறார் . 

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வவுனியாவிலிருந்து அவரை அழைத்து வரப்படும் மணிவண்ணன் , இரவு 8.00 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

இன்று யாழில் நீதிவான் முன்னிலையில் வி.மணிவண்ணன் முற்படுத்தப்படவுள்ளார் . இதன்போது , வி.மணிவண்ணன் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளனர் . 

எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் யாழ் நீதிமன்றத்தில் தற்போது பிரசன்னமாகியுள்ளனர் . வி.மணிவண்ணன் நீதிமன்றம் அழைத்து வரப்படும் தகவல் பரவியதால் , நீதிமன்றத்தின் முன்பாக பலர் குவிந்துள்ளனர் .

No comments

Note: Only a member of this blog may post a comment.