ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறை கூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.