வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நான்காம் திகதி மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.
எனினும் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் அஞ்சியதால் பொலிசாரால் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்றய தினம் குறித்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து குறித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் இன்றைய தினம் அதிகாலை வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
No comments
Note: Only a member of this blog may post a comment.