தனித்தமிழீழத்தை இலங்கைத் தீவில் அமைப்பதற்கும், சர்வதேச சமூகம் அதற்கு உதவும் வகையில் சில தேரர்களின் செயற்பாடு அமைவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணோசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
“ கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது.
1)நாட்டின் பெயரை "சிங்களே" என மாற்றனும்.
2)அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம்.
3)சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி.
அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, "உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள்" என தமிழர்களுக்கும், "அதற்கு உதவுங்கள்" என சர்வதேச சமூகத்துக்கும் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.
ஆகவே, இந்த தேரர்கள்தான் இன்று இலங்கையின் பிரதான பிரிவினைவாதிகள். மீண்டும், மீண்டும், இலங்கைக்கு கறுப்பு "பெயிண்ட்" அடிக்கிறார்கள்..!”
என்றார் மனோ கணேசன்.
No comments
Note: Only a member of this blog may post a comment.