இந்த சம்பவம், கண்டி-மஹியாவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.
குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் கண்டி- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சடலத்தை மயான பூமியில் வைத்துவிட்டு, இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பட்டாசும் மயானத்தில் வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
அந்த சத்தத்துக்கு களைந்த குளவிகள் அங்கிருந்தவர்களை கடுமையாக கொட்டியுள்ளன.
இதன் காரணமாக, சடலத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
எனினும், சவப்பெட்டி மூடியிருந்தமையால் சடலத்தின் மீது குளவி கொட்டவில்லை.
இருட்டியதும் மயானத்துக்குச் சென்ற வேறு சிலர் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மயானத்தை சுற்றியிருக்கும் மரங்களில் பெருமளவில் குளவி கூடுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.