யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்கு புறம்பான கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனிப் பாணி, எதனோல் எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாக கொண்டு தயாரிக்கப்பட்ட கலப்பட மதுபானம் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கலையகத்துக்கு அருகில் இயங்கி வரும் விடுதி ஒன்றிலேயே இந்த மதுபான உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் இன்று சுற்றிவளைப்பு தேடுதலில் அங்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கலப்பட மதுபானத்திற்கு பயன்படுத்தப்பட்ட எதனோல், சீனி, எசன்ஸ் மற்றும் கால் மற்றும் முழு போத்தல்கள் உபகரணங்கள் என்பவை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.பி லியனகேயின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர் பிரதீப் தலைமையிலான அணியினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபரை யாழ்பாணம் நீதிவான் நீதிமன்றம் முற்படுத்தப்பட்டவுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.