யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அஅவர் குறிப்பிட்டார்.
அத்துடன் யாழ்ப்பாண விமான நிலையம் மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், 1000 பயணிகளைக் கையாளும் அளவிற்கு முனையம் உருவாக்கப்படும் என்றும் பெரிய விமானங்களும் தரையிறங்கும் வகையில் ஓடுபாதை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சர்வதேச விமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக அதன் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.