நீர்கொழும்பில் வைத்தியர் ஒருவரினால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டு பிணவறைக்கு அனுப்பப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர்வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் நிர்மலா லோகநாதன் ரெிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிட்டிபன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய எலெக்ஸென்டர் சில்வா என்ற நபர் நேற்று முன்தினம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரத்தத்தில் சீனி மட்டம் குறைவடைந்த காரணத்தினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறி பிணவறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பிணவறையில் உள்ள கணவனின் சடலத்தை பார்க்க வந்த கணவன் உயிரிழக்கவில்லை என்பதனை கண்டுபிடித்துள்ளார்.
நான் அவருக்கு அருகில் செல்லும் போது துணி ஒன்றினால் அவர் மூடப்பட்டிருந்தார். அந்த துணியை வெளியே எடுத்து பார்த்து அழும் போது அவரது வாய் அசைந்தது.
பின்னர் அவரிடம் அசைவுகள் காணப்பட்டது. நான் வைத்தியரை அழைத்து கூறியும் போது எனது கணவர் ட்ரொலியில் இருந்து எழுந்து நடந்து செல்லவும் ஆரம்பித்தார். தற்போது அவர் நல்ல உடல் நிலையில் உள்ளார்.
மூளை சாவடைந்து விட்டார் என்றே கூறினார்கள். எனினும் 2 மணித்தியாலங்கள் கணவர் பிணவறையிலேயே இருந்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் வேறும் யாருக்கும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.