ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை இன்று சனிக்கிழமை அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியான பதிவில், புத்தாண்டிற்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வில், நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையிலான தகவல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
இதன்படி தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்த வந்த நபர், பின்னர் தாக்குதல் இடத்தை மாற்றியமை, ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்புக் கூறலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பே ஏற்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்களை அவர் சபையில் போட்டுடைக்க உள்ளார் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.