கொழும்பு துறைமுக நகரத்தில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்படுமா? என்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை நிர்வாக அதிகாரி, அஜித் பெரேரா நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சூதாட்ட விடுதிகள் இருந்த இடங்களில் விபச்சாரம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொழும்பு துறைமுக நகரத்திலும் நிலைமை அப்படியே இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தை அமைக்கும் வர்த்தமானி பிரகடனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பெரேரா அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த சட்டம் துறைமுக நகரத்தை ஒரு தனி நிர்வாக பிரிவாக மாற்றும் என்று எச்சரித்தார். அத்துடன் இது ஹொங்காங் மற்றும் சீனாவைப் போலவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.