தென்மராட்சி பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாம் அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
வயோதிப தம்பதியை கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதன்போது 72 வயதான சிவராசா என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அயலிலுள்ள இளைஞர்கள் சிலர் சம்பவ வீட்டுக்கு சென்ற வேளையில், கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.