Breaking News



இந்தவறிய மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு புரிவதில்லை. அவர்கள் இங்கு வருவதுமில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்த போது சுற்றாடலைப் பாதுகாக்க என்னைப்போல் எவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் வெள்ளை வான் அனுப்பியதாக அந்தக்காலத்தில் கூறினார்கள். நபர்களை கடத்தி முதலைகளுக்கும், எனது மீன் தொட்டியில் உள்ள சுறாக்களுக்கும் உண்ணக் கொடுத்ததாக கூறினார்கள்.

இப்போது வெள்ளை வான் இல்லை. சுறாக்களும் இல்லை. முதலைகளும் இல்லை. அவையனைத்தையும் வேறு எவரோ செய்திருக்கின்றார்கள்.

எமது தேங்காய் எண்ணெய்யே சிறந்தது. நாம் பாம் எண்ணெய்யை தடை செய்தோம். எமது தேங்காய் எண்ணெய்க்கு உலகில் பாரிய கேள்வி உள்ளது. ஆனால் நாம் அந்தளவிற்கு தெங்கு உற்பத்தியை செய்யவில்லை.

இதனால் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய்யை வர்த்தகர்கள் கொண்டு வருகின்றனர். அவற்றின் தரத்தை ஆராய அரச நிறுவனங்கள் உள்ளன. இப்போது அவற்றை கைப்பற்றியதால் நச்சு தேங்காய் எண்ணெய் கொண்டுவந்ததாக எம்மைத் தூற்றுகின்றனர். அதனை நாம் கொண்டு வரவில்லை. வர்த்தகர்களே கொண்டு வருகின்றனர்.

 - கோத்தாபய ராஜபக்ச,
   ஜனாதிபதி,
   @வவுனியா.

No comments

Note: Only a member of this blog may post a comment.