இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.
மேலும் கொழும்பு பேராயர், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்
No comments
Note: Only a member of this blog may post a comment.