பதுளைப் பிரதேசத்தில் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானிக்க கூடியதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பதுளை - இரண்டாம் கட்டை- நேத்ராகம பிரதேசவாசிகள் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தன என்பதும் கூட்டிக்காகட்டத்தக்கது.
அதனடிப்படையில், மாத்தறை, தொட்டமுன மீனவ கிராமம், குளியாப்பிட்டி - எலதலவ மற்றும் மூனமல்தெனிய போன்ற பிரதேசங்களிலும், அனுராதபுரம் மஹாவிலச்சிய, எந்தகல்ல பிரதேசங்களிலும், அம்பாறை தமன தொட்டம பிரதேசங்களிலும் இதற்கு முன் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Note: Only a member of this blog may post a comment.