Breaking News


சிவ் ஹெலே' என்று கூறப்படும் நான்கு கோத்திரங்களே நாட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்துள்ளன. இது பிற்காலத்தில் சிங்ஹலே என்று திரிபடைந்துள்ளது என தம்பானே ஆதிவாசிகள் கோத்திரத் தலைவன் ஊருகே வன்னியத்தோ தெரிவித்தார்.

தம்பானே ஆதிவாசிகள் கோத்திரமும் 'மஹபொலவே மினிஸ்ஸு' (பூமியின் மனிதர்கள்) அமைப்பும் இணைந்து கண்டி பொல்கொல்லை நீர்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் மரம் நடும் திட்டம் ஒன்றை நேற்று நடாத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த தம்பானே ஆதிவாசிகள் கோத்திரத் தலைவன் ஊருகே வன்னியத்தோ,

சிவ் ஹெலே' என்று கூறப்படும் நான்கு கோத்திரங்களே நாட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்துள்ளன. அந்த நான்கு கோத்திரங்களுள் யக்கர், நாகர், வேடுவர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதில் வேடுவர் இனம் 48000வருடங்கள் பழைமையானது. இந்த நான்கு கோத்திரங்களை சிங்களத்தில் ‘சிவ் ஹெலே’ என்று அழைப்பர். அதாவது நான்கு பாரம்பரிய கோத்திரங்கள் என்பதாகும் இது பிற்காலத்தில் சிங்ஹலே என்று திரிபடைந்துள்ளது.

இன்று நாட்டு மக்கள் மத்தியில் ஆசை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பொருளீட்ட போட்டித் தன்மை அதிகரித்துள்ளது. இதனால் யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தான் போட்டியில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலையில் எல்லா விடயங்களிலும் மாற்றம் செய்து வருகின்றனர்.

இதனால் சுற்றாடல் பற்றிக் கவலையும் இல்லை. இயற்கை வளம் பற்றி கவலையும் இல்லை.

இதன் எதிர் விளைவாக சுற்றாடல் எம்மைத் தண்டிக்கிறது. சுற்றாடல் எம்மை சீண்டும் போது அதற்கான அடிப்படையை மாற்றாது தற்காலிக தீர்வை மட்டும் பெறுகின்றோம். இதுவே இன்றைய பிரச்சினை. அடிப்படையை மாற்றாது ஏற்படும் அழிவுகளுக்கு அவ்வப் போது தற்காலிக தீர்வை மட்டும் பெறுகிறோம் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.