அசாமில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அசாமில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி 2வது கட்ட வாக்கு பதிவு நடந்தது. இதில், திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி ஒன்றில் 181 வாக்குகள் பதிவாயின. ஆனால், அந்த வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே உள்ளனர்.
181 வாக்குகள் பதிவாகி உள்ள விவரம் தெரிய வந்தது தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி அளித்தது. இதனை தொடர்ந்து 6 தேர்தல் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
குறித்த வாக்கு சாவடியில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது
No comments
Note: Only a member of this blog may post a comment.