"எந்தவொரு முறைப்பாடும் இல்லாத பின்னணியிலும் எந்த நீதிமன்ற உத்தரவொன்றும் இதில் நான் கலந்து கொள்வதை தடுத்திராத பின்னணியிலும் எனது வாக்குமூலத்தை பெறுவதற்கு பொலிசாருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை பதிவு செய்து விட்டு,பொலிஸாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் தடையுத்தரவை மீறி மக்கள் பேரெழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் வாக்கு மூலம் பெற்றனர்.
அதன் போது , எனக்கெதிராக எந்தவொரு முறைப்பாடும் இல்லாத பின்னணியிலும் எந்த நீதிமன்ற உத்தரவொன்றும் இதில் நான் கலந்து கொள்வதை தடுத்திராத பின்னணியிலும் எனது வாக்குமூலத்தை பெறுவதற்கு பொலிசாருக்கு எந்த அதிகாரமும் கிடையாது பொலிஸாரின், “விசாரணைக்கு” உதவியாக வேண்டுமானால் வாக்குமூலம் தரலாம் என்பதனை பதிவு செய்ய கோரி, போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தனது வாக்கு மூலத்தை பொலிஸாருக்கு வழங்கினார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.