Breaking News



நேற்றயதினம் பாமர விவசாயிகளாலால் மேற்கொள்ளப் பட்ட ஆர்பாட்டம் காரணமாக சுமார் 3 மணிநேரம் மாத்தரை கொழுப்பு பிரதான வீதி முடக்கப்பட்டத்துடன் அரசாங்கத்துக்கும் பின்னடைவு ஏற்படுள்ளத்து.

யானைகளை பராமரிப்பதற்காக விவசாயக் காணிகளை அரசாங்கம் காவலிகரம் செய்துள்ளதாக அறிந்த விவசாய  மக்கள் கடந்த 53 தினங்களாக  முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டம் சமல் ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பூதாகாரமாக வெடித்துள்ளது.

  இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய நேற்று முன்தினம் மீண்டும்  விவசாய பெண்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நேற்றைய தினம்விவசாயிகள்  அம்பலாந்தோட்டை நகரை மறித்து பாரிய போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளனர்.

 கோட்டா  அரசாங்கத்தின் கோட்டையான  அம்பாந்தோட்டை,அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் இவர்களுக்காக நேரடியாக சென்று வாக்கு சேகரித்த பிக்குகளும் இணைந்து   பாதையை மறித்து பாரிய போராட்டதை  முன்னெடுத்து  வருகின்றமை இந்த அரசாங்கத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

  யானைகும்  மனிதனுக்கும்   இடையில்   முரண்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு வரை விவசாயிகள் பேரணியாக செல்வதாகவும் எச்சரித்துள்ளனர் .

அதிகளவிலான சிங்கள மக்களின் வாக்கில் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கம் சிங்கள மக்களால் தற்போது  ஆட்டங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.