வவுனியாவில் இரவு ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைந்த முஸ்லிம் இளைஞன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

வவுனியாவில் இரவு ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைந்த முஸ்லிம் இளைஞன்!


வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லிம் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளளர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக இந்தவாரம் காணப்படும் நிலையில், நேற்றைய தினம் தேவாலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார். 

அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்த போது 25 வயதுடைய கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் என தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அவரை  உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்