Breaking News


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்னும் 30 நிமிடத்தில் ஆரம்பமாவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரம் தாமதமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையை மேற்கோள்காட்டி முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா தொடர்பிலான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பத்தினால் இன்றைய தினம் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Note: Only a member of this blog may post a comment.