கொழும்பில் பெண்ணொருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டு பரபரப்பு அடைந்துள்ள நிலையில், மற்றுமொருவர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல், நாரம்மல – பஹமுனே பகுதியில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பஹமுனே – கூரிகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.
காரொன்றில் வந்த சந்தேகநபர், மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் பின்னர் கொலையாளி நாரம்மல காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் தன்னுடைய மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை தனது கைப்பேசிக்கு அனுப்பி தன்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.