Breaking News



காதலியின் ரிக்ரொக பதிவுகள் பிடிக்காமல் கண்டித்ததால் , அவர் ரிக்ரொக்கிலேயே ஒரு காதலனை பிடித்து விட்டதாக கூறி , யுவதியுடன் இளைஞன் ஒருவர் மல்லுக்கட்டிய சுவாரஸ்ய சம்வம் இடம்பெற்றது . யாழ் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நேற்று ( 16 ) மாலை இந்த சம்பவம் நடந்தது .

நேற்று மாலை இரண்டு யுவதிகள் பல்பொருள் அங்காடிக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த போது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இளைஞர்கள் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்தனர் . அதில் ஒரு இளைஞன் , பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த யுவதியுடன் தகராற்றில் ஈடுபட்டார் . இருவரும் உரத்த குரலில் முரண்பட , பல்பொருள் அங்காடி , பாதுகாப்பு ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்க முயன்றனர் .

முரண்பட்ட இளைஞன் , அந்த யுவதியை தொலைபேசியில் வீடியோ படம் பிடிக்க முயல , அவர் கைத்தொலைபேசியை தட்டிவிட , நிலத்தில் விழுந்த தொலைபேசி உடைந்தது . கோபமடைந்த இளைஞன் , யுவதியை தாக்க முயன்றபோது , அங்கிருந்த ஊழியர்களால் அவர் வெளியேற்றப்பட்டார் .

தான் அந்த யுவதியை சில வருடங்களாக காதலித்ததாகவும் , அண்மைய வருடங்களில் அவர் ரிக்ரொக் வீடியோக்களை வெளியிட்டு , அதன் மூலம் வேறொரு காதலை ஏற்படுத்தி , தன்னை தவிர்த்து வருவதாகவும் இளைஞன் குற்றம்சாட்டினார் . யுவதி சில தினங்களின் முன்னரும் ரிக்ரொக் வீடியோ வெளியிட்டதாகவும் , அதையெல்லாம் எப்படி சகித்துக கொள்வதென்றும் சச்சரவில் ஈடுபட்டார் .

பங்பொருள் அங்காடிக்கு வெளியே இளைஞர்களை அனுப்பிய பின்னரும் , முன்னாள் காதலன் முறுகிக் கொண்டு நின்றார் . அங்காடியினர் , பொலிசாரை அழைக்க முயன்றபோது , இளைஞர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர் .

No comments

Note: Only a member of this blog may post a comment.