சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 24 பேரை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்பிட்டிய குரக்கன்ஹேனாவில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை அவர்கள் படகு மூலம் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள தயாரானபோது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த குழுவில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களும் உள்ளனர்.
இவர்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாரவூர்தியும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக கைதானவர்களும் பாரவூர்தியும் கல்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.