Breaking News


கொழும்பு டாம் விதியில் வைத்து பயணப் பொதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் உடலின் தலைப்பகுதி களனிகங்கையில் எறிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

பொலஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் வைத்து இரத்தினபுரி – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது தலைப்பகுதி அற்ற உடல் அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்தேக நபரும் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், யுவதியின் தலைப்பகுதியை சந்தேக நபர் களனி கங்கையில் எறிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் இன்று மாலை 03 மணி தொடக்கம் விசேட பொலிஸ் குழு மற்றும் சுழியோடிகள் அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது


No comments

Note: Only a member of this blog may post a comment.