நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் உடுவில் பகுதியைச் சேரந்த 81 வயது பெண், வாகரை பகுதியைச் சேர்ந்த 76 வயது ஆண், அக்குரணைப் பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் ராகமையைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் ஆகிய நான்கு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.