Breaking News



சுற்றாடலை அழிப்பதாக பலர் எம்மை தூற்றுகின்றனர். நாம் சுற்றாடலை அழிக்கவில்லை. மஹிந்த ஆட்சியில் கொழும்பை செழிமை நகரமாக்கினேன். நாடாளுமன்றில் உள்ள மரங்களையும் நானே அன்று நாட்டினேன்.

அவ்வாறு சுற்றாடலை பாதுகாத்தவரையே இன்று தூற்றுகின்றனர். தூற்றுவோரிடம் எந்த சுற்றாடல் திட்டங்களும் இல்லை. சுற்றாடலை பாதுகாப்பது விஹாரமாதேவி பூங்காவில் பதாகை அமைப்பதல்ல.

வனப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் மக்களுக்கானவை. தமது பயிர் நிலங்களை அரசாங்கம் கொள்ளையிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அது தொடர்பில் ஆராயுமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு கூறியுள்ளேன்.

ஏனெனில் அவர்கள் கூகுள் மப்பை வைத்தே கற்களை பதித்துள்ளனர். அவ்வாறு இடம்பெற்றிருந்தல் அதனை சீர்செய்ய வேண்டும். நன் காடுகளை அழிக்க அனுமதி வழங்கவில்லை.

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுந்திரமல்ல. அது மாபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டை கொண்டு செல்ல முயன்றால் அது மாபியா.

மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயன்றால் அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்கவும் எனக்கு தெரியும். தேவையானால் பாடம் கற்பிக்கும் முறையும் தெரியும்.

நான் ஊடக சுதந்திரம் வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நாட்டை நிர்வகித்துள்ளேன். ஊடகங்ளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

 -கோத்தாபய ராஜபக்ச
  ஜனாதிபதி.

No comments

Note: Only a member of this blog may post a comment.