Breaking News


கொழும்பில் உள்ள முக்கியமான கல்வி நிறுவனம் ஒன்றின் அதிகாரி தன்னை உடல் ரீதியாகத் துன்புறுத்தியாகக் கூறி, தமிழ் பெண் ஒருவர் பம்பலபிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான செய்தி இலங்கையின் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கொழும்பில் உள்ள பிரபல்யமான கல்வி நிறுவனத்தில் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது பிரத்தியோகச் செயலாளராகக் கடமையாற்றும் தமிழ்ப் பெண்ணை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண் 10.02.2021 அன்று பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில முறைப்பாடு செய்துள்ளார்.(Complaint number WCCB 239/33)

இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women & Child Bureau, Sri Lanka) அவர் இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.( Complaint number CWB-CIB V 389/40)

இந்த முறைப்பாடு தொடர்பாக இலங்கையின் தமிழ் ஆங்கில ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்திருந்தன.

குறிப்பாக தமிழ் பெண்களை மிரட்டி  துஷ்பிரயோகம் செய்கின்ற வழக்கத்தை குறிப்பிட்ட அந்தப் பெரும்பாண்மை இன அதிகாரி தனதாகக் கொண்டு வருவதாக வெளியாகி இருந்த அந்தச் செய்திகள் பற்றிய தேடல்களை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவந்தன.

தன் கீழ் பணியாற்றும் தமிழ் பெண்களை தகாத உறவுக்கு நிர்பந்திப்பதாகவும், முரண்டுபிடித்தால் ‘உன்னை புலி என்று கூறி பொலிசில் பிடித்துக்கொடுப்பேன் ‘ என்று அந்த அதிகாரி மிரட்டியதாகவும் தெரியவந்தது.

தனக்கு நடந்த அநீதி பற்றி பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இவ்வாறு தெரிவித்தார்:

ICBT Campus (International College of Business & Technology) Bambalapitiya, Colombo கல்வி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக தற்போது கடைமையாற்றும் Dr.Sampath என்பவர் செயலாளராகக் கடமையாற்றும் என் மீது நீண்ட நாட்களாக வாய் மொழி மூலமும், சங்கடமான தொடுகைகைள் மூலமும் துன்புறுத்தல் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

ICBT Campus இல் Centre Coordinator ஆக பணி புரிந்து கொண்டு வந்தவேளையில் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு செயலாளராக 2020ம் ஆண்டு இடம் மாற்றப் செய்யப்பட்டேன்.

அதன் பின்னர் சம்பத் படிப்படியாக தனது வேலையைக் காட்டத் தொடங்கினான்.

ஆரம்பத்தில் அருவருப்பான விதத்தில் வாய்மொழி மூலம் மன ரீதியான சங்கடங்களை ஏற்படுத்தி, பின்னர் அ ந்தர ங்க உறுப்புகளை தொட முயற்சி செய்த வேளையில் அவனை வன்மையாக கண்டித்ததேன். .

ஒருநாள் குளிர் பானத்தில் எதனயோ கலந்து கொடுத்து, மயக்க நிலையை ஏற்படுத்தி தகாத உற வுக்கு முயற்சி செய்தான்.

வீறிட்டு கத்தி, ஊழியர்களை அழைத்து அவனிடம் இருந்து தப்பியோடியிருந்தேன்.

எனக்கு நடந்த அவலம் பற்றி மேலதிகாரிகளுக்கு முறையிட்டு, உரிய நடடிவக்கை எடுக்கும்படி கேட்டேன்.

எனது இந்த ஒழுக்காற்று முறைப்பாடு பற்றி அறிந்த அந்த அதிகாரி, “ தமிழ் பெண் தானே நீ.. என்று ஆரம்பித்து நீ எனக்கு குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய்” என்றும் பலவிதமாக கெட்ட வார்தைகளால் கேவலமாக திட்டி என்னை அவமானப்படுத்த தொடங்கினான்.

என்னுடைய தந்தையை தொலைபேசியில் அழைத்து 'நடந்த சம்பவத்தை எங்கும் கூறக் கூடாது' என்றும் மாறாக கூறினால் 'மொத்த குடும்பத்தையும் உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்' என்று அச்சுறுத்த தொடங்கினான்.

இந்த விடயம் எமது நிறுவனத் தலைவர் பார்வைக்கு வந்தபோது, என்னை அழைத்த நிறுவனத் தலைவர், “இதை பெரிது படுத்த வேண்டாம் ஏனெனில் ஒரு நிறைவேற்று அதிகாரிக்கு செயலாளராக பணிபுரியும் போது இவ்வாறு நடப்பது பெரிய விடயம் அல்ல. இது எல்லாம் சகஜமான நடைமுறை. நீங்கள் தான் சமாளித்து போகவேண்டும், இப்படியே விட்டுவிடும்” என்று கூறியுள்ளார்.

மிகவும் மனம் நொந்து போன நான் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு தொடர்ந்து கோரிக்கை முன்வைத்தேன்..

இறுதியாக ஒரு கந்துரையாடல் மட்டும் வைப்போம் என்றுகூறி, என்னை அழைத்த அவர்கள் “இந்த விடயத்தை வெளியில் சொன்னால் எங்களுக்கும் போலீசில் பெரிய ஆட்களைத் தெரியும் பிறகு உங்கள் குடும்பத்துக்கு தான் பெரிய பிரச்சினை நடக்கும். அதனால் இதை இப்படியே விட்டு விடுங்கள்” என்று அச்சுறுத்தியிருந்தார்கள்.

மேலும் அங்கு பணிபுரியும் மனிதவள முகாமையாளர் “இங்கு கட்டிப்பிடிப்பதும், மது அருந்துவதும், ஆண்களுடன் நடனம் ஆடுவதும் முத்தம் கொடுப்பதும் பெரிய குற்றம் அல்ல. உம்மேல் எல்லா உரிமையும் Sampathற்கு உண்டு. ஏனெனில் நீர் அவரது செயலாளர்” தெரிவித்தார்.

தற்போது நீதிவேண்டி Bambalapitiya போலீசிலும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women and Child Bureau of Sri Lanka) முறைப்பாட்டை பதிவிட்டுள்ளேன்”- இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக 10.02.2021 இன்று பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், இன்றுவரை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக விசாரணைகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர் தமிழ் பெண் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வழமைபோலவே இழுத்தடிப்புக்கள் நடக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அதேவேளை, குற்றம் சுமத்தப்பட்ட Dr.Sampathஇன் கருத்துக்களைக் கேட்பதற்காக அவரைத் தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றபோதும் எமது அழைப்புக்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. எமது நிருபரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களுக்கும் அவர் பதில் வழங்கவில்லை.

இது இவ்வாறு இருக்க, இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய மற்றொரு தமிழ் பெண்ணுக்கும் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

தன்னிடம் ஒரு உயரதிகாரி தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும், அதுபற்றி காவல் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்ததாகவும், அவர் எமது நிரூபருக்குத் தெரிவித்தார்.

இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் தற்பொழுது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது (Colombo Majestrate Courts -B 81339)

அந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று 23.07.2019 அன்று வெளியிட்ட செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரியும் தமிழ் பெண்கள் பெரும்பாண்மையின அதிகாரிகளினால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்ற அதேவேளை, அந்த துன்புறுத்தல்கள் பற்றி துணிந்து வெளியே கூறுகின்றவர்கள் மிரட்டப்படுகின்றதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

தெற்கில், குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் பணியாற்றுகின்ற தமிழ் பெண்கள் பலவிதமான துன்புறுத்தலுக்கு இலக்காகிவருகின்ற இந்த நேரத்தில், தமக்கு நடைபெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக துணிந்து குரல் எழுப்பியுள்ள இந்த பெண்களை பாராட்டுகின்ற அதேவேளை, பாதிப்புக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அதிகாரங்கள் வழிசமைக்கவேண்டும் என்றும் கோரி நிற்கின்றோம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.