Breaking News


யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டம் நடத்திவரும் குழுவுக்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் அருண் மைத்திரேயன் என்பவர் தமது கட்சியில் இணைந்து போட்டியிட்டபோதும் அவருக்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

அருண் மைத்திரேயன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக போராடுகிறார் என்ற பேச்சின் அடிப்படையிலேயே அவரை கட்சியில் இணைத்து தேர்தலில் போட்டியிடவைத்ததாகவும் அதைவிட அவருடனான தொடர்பு ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்ட அங்கஜன் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட சாணக்கியன் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் தம்முடன் இணைந்து செயற்பட்டமைக்காக அவர் தம்முடைய ஆள் என சிலர் கூறிவருவது நிறுத்தப்படவேண்டும் என்றும் அங்கஜன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் அரியாலை கிழக்கு ஐயனார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வுக்குப்பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அங்கஜன் மேற்கண்டவாறு கூறினார்.


No comments

Note: Only a member of this blog may post a comment.