Breaking News



யாழ் நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர் , நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார் .

யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார் . அவரது குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் , மனைவி மற்றும் மகள் தொற்றிற்குள்ளானது இன்று தெரிய வந்தது . தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அந்த மாணவி , நேற்று முன்தினம் ( 8 ) வரை பாடசாலையில் நடந்த வகுப்பிற்கு சென்றிருந்தார் . அந்த வகுப்பில் 40 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் .

இதையடுத்து , அந்த வகுப்பு மாணவர்கள் , ஆசிரியருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது .

No comments

Note: Only a member of this blog may post a comment.