Breaking News



பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று ( 20 ) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகியிருந்தனர் . பசறை பகுதியே சோகமயமாகியுள்ளதுடன் , வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன . பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர் . 

பேருந்து விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா ( 31 ) , அந்தோனி நோவா ( 32 ) ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்த தம்பதியினர் வழக்கமாக பேருந்தில் ஏறுமிடத்திற்கு வர தாமதமாகியதால் , பேருந்தை தவறவிட்டுள்ளனர். 

ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்பதற்காக ஆட்டோவில் வந்த , பேருந்தை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.

அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் உள்ளார் .

No comments

Note: Only a member of this blog may post a comment.