பணம் இருந்தால் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாது. அவ்வாறு சட்டங்கள் மாற்றப்பட்டாலும் அதனை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைமையை சட்டங்களினால் மாற்றிவிட முடியாது. முஸ்லிம் ஆண் ஒருவர் தனது பண வசதிக்கு ஏற்ற வகையில் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றார். அதில் எவ்வித தவறும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கூறுவது போன்று இல்லாதவர்களை இருப்பவர்களாக்கும் நோக்கில் முஸ்லிம் ஆண்கள் பெண்களை திருமணம் செய்கின்றனர்.
செல்வம் இருக்கும் ஓர் ஆண் வசதி குறைந்த சில பெண்களை திருமணம் செய்து அவர்களை பராமரிப்பதில் தவறில்லை. முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.