வெளிநாடொன்றுக்கு தொழில் நிமித்தம் சென்ற இலங்கையர்களில் 557 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவ் வெளியாகியுள்ளது.
கட்டார் நாட்டுக்கு சென்ற இலங்கைத் தொழிலாளர்களே கடந்த 10 வருடத்தில் இவ்வாறு உயிரிழந்தள்ளனர்.
இது தொடர்பில் கார்டியன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கட்டாரில் தொழில்புரிந்த நிலையில் 6500ற்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பல்வேறு விபத்துக்களில் பலியாகியிருக்கின்றனர்.
2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிக்கான அனுசரணை நாடாக கட்டார் 10 வருடங்களாக அதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றது.
இதற்காக பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களில் 12 பேர் ஒருவாரத்தில் உயிரிழந்து வந்த நிலையில், இதுவரை 6500 பேர்வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் கடந்த 10 வருடங்களில் இலங்கையைச் சேர்ந்த 557 பேர் கட்டாரில் உயிரிழந்துள்ளனர். மேலும் பிலிப்பைன்ஸ், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளளும் உயிரிழந்திருக்கின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.