Breaking News



வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (26) உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் உட்பட 29 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே இந்த 29 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.