ஐக்கிய தேசியக் கட்சியை 2024ஆம் ஆண்டு ஆட்சிக்குக் கொண்டு வருவேன் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகள்,
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுகொள்ளமாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.