Breaking News


பொத்துவில்- பொலிகண்டி வரை காணொளியை பார்க்க இங்கு அழுத்துங்கள்

கல்முனை நகரிற்குள் தற்போது பெரியளவிலான ஆர்ப்பாட்ட போராட்டமாக இடம்பெற்று வருகிறது. இதனால் கல்முனை நகரின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

வாகன பேரணி சம்மாந்துறை பகுதிக்கு வந்த போது, சம்மாந்துறை பொலிசார் நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் பிரமுகர்களிடம் வழங்க முற்பட்டனர். பலர் அவற்றை பெற்றுக்கொள்ளவில்லை.

இரா.சாணக்கியன் பெரும் தர்க்கத்தின் பின்னர் தடையுத்தரவு பிரதியை பெற்றுக்கொண்டார். அவர் கல்முனை மாநகர பிரதேசத்திற்குள் வாகனத்தை விட்டு கீழே இறங்க முடியாது.

அதேவேளை, கோவிந்தம் கருணாகரன் எம்.பியிடம் தடையுத்தரவை வழங்க முற்பட்ட போது, அவர் அதை தட்டிவிட்டு தொடர்ந்து முன்னேறினார்.

முன்னதாக, காரைதீவிலும் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் அவற்றை தூக்கிவீசிவிட்டு முன்னகர்ந்தனர்


No comments

Note: Only a member of this blog may post a comment.