Breaking News



வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலை அங்கிகள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து செட்டிகுளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலிற்கமைய குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய பொலிசார் மற்றும் விசேட அதிரடிபடையினர் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரண்டு தற்கொலை அங்கிகளை மீட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments

Note: Only a member of this blog may post a comment.