Breaking News



தம்புள்ளை, யாபாகம பகுதியில் இளம் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நச்சூட்டி தானும் நஞ்சருந்தியுள்ளார். அவர்கள் வீதியோரம் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (15) இடம்பெற்றது.

தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, 11 மாதம் மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கும் தாய் நஞ்சூட்டியுள்ளார். பின்னர் தானும் நஞ்சருந்தினார்.

பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்த நிலையில், பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டு தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

11 மாத குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததால் பேரதெனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தம்புள்ள நீதிமன்றத்தில் பொலிசார் இன்று பி அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, தாயாரான கே.ஜி.மதுஷா லக்மலி (28) என்பவரை மார்ச் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதிவான் வசந்த அரியரட்ன உத்தரவிட்டார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.