இலங்கையிலும் நேபாளத்திலும் பாரதிய ஜனதாவின் ஆட்சியை அமைக்கும் திட்டம் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உள்ளது.
இவ்வாறு திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர் இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார் என பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பாஜகவிற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சந்திப்பின்போது பாஜக பல மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டபோது இலங்கையும் நேபாளமும் மிச்சமிருக்கின்றன என அமித்ஷா தெரிவித்தார். நாங்கள் இலங்கையிலும் நேபாளத்திலும் கட்சியை விஸ்தரிக்கவேண்டும் அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் என தெரிவித்தார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்க்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதலமைச்சருக்கு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி அமித்ஷாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.