எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் குறிப்பிடப்படாமல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசின் காலத்தில் எம்.ஏ.சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது, அந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மீளவும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (7) இரவு முதல் சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டது.
அவரது பாதுகாப்பு அணியினர் காரணம் குறிப்பிடப்படாமல் மீள அழைக்கப்பட்டனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியின் எதிரொலியாக இந்த நீக்கம் நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.
தனி வாகனத்தில் 7 பேரும், எம்.ஏ.சுமந்திரனின் வாகனத்தில் ஒருவருமாக 8 விசேட அதிரடிப்படையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Note: Only a member of this blog may post a comment.