Breaking News



சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டதை அடுத்து , நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார் . நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . 

இந்தியாவில் ஒரு டன் பாறைக்குள் 0.5 கிராம் தங்கம் தங்கம் கிடைக்கின்றதுடன் , ஆபிரிக்காவில் அந்த அளவானது , ஒரு டன் பாறைக்குள் 100 கிராம் ஆகும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார் . இந்தநிலையில் , இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கமானது , ஒரு தொன் பாறைக்குள் , 5 முதல் 10 கிராம் அளவில் இருக்கும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார் . இதுநேரம் , 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான நிலப்பகுதியில் , விலைமதிப்புள்ள பாறைகள் உள்ள வலையமும் கண்டறியப்பட்டுள்ளது . மத்திய , ஊவா , கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கியதாக இந்த வலையம் இருப்பதாகவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

  இந்த வலையத்தில் தங்கம் , செப்பு , நிக்கல் , இரும்பு உள்ளிட்ட அரிய உலலோகங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . மாத்தளை , பதுளை , பண்டாரவளை , பலாங்கொடை , இரத்தினபுரி , எல்ல , வெல்லவாய , உசன்கொட மற்றும் சேருவாவில முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளில் , சிறு அளவில் தங்கம் கிடைத்துள்ளதாகவும் பேராதனைகிடைத்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

No comments

Note: Only a member of this blog may post a comment.