Breaking News


யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் இருந்து மன்னார் வரை படகில் இந்திய தூதரக அதிகாரிகள், மற்றும் அவர்களது குடும்பஸ்தர்கள் கடல்வழிப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அவர்தம் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் என சுமார் 30பேர் நேற்றைய தினம் படகு மூலம் புறப்பட்டு மன்னாருக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு மன்னார் வரை கடலில் பயணித்த தூதரக அதிகாரிகள் மீண்டும் கடல்வழியாகவே யாழ்ப்பாணம் திரும்பினர்.

இந்த நிலையில் இந்திய அதிகாரிகள் குழுவினர் மன்னாரிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட மணல் திட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை யாழில் உள்ள தீவுகள் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுகளும் அதனைச் சூழவுள்ள கடலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.