முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் பென்தோட்டவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ரணில்,
பிரதமர் மகிந்தவை நட்பு ரீதியாக சந்தித்ததாக தெரிவித்தார்.
“ஆம் அது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு. நாங்கள் சில காலமாக சந்திப்பதைப் பற்றி கலந்துரையாடி வந்தோம். என்னைப் போலல்லாமல், மற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமரை சந்திக்க முடியும். இந்த சந்திப்பின்போது நாட்டின் பொருளாதாரம் குறித்து நான் பேசினேன், ஏனென்றால் அவர் நிதி அமைச்சரும் கூட. ” என்று தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் எதிர்க்கட்சியை வழிநடத்த மிகவும் பொருத்தமான நபர் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்பொருமுறை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த விக்ரமசிங்கத்தைத் தவிர வேறு யாரும் இருப்பர் என்று தான் நினைக்கவில்லை என்றார்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், நாடாளுமன்றில் அவருடைய இருப்பு அரசாங்கத்திற்கு பாதகமாக இருந்தாலும். ரணில் விக்ரமசிங்க பொருத்தமானவர் என பிரதமர் தெரிவித்தார்
No comments
Note: Only a member of this blog may post a comment.