Breaking News



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலுக்காக எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது என வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

அந்த அமைப்பு நேற்று (27)  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்வாறு குற்றம்சுமத்தியுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எமது போராட்டங்களை திசை திருப்பி, அரசை திருப்திபடுத்த முயல்கின்றது. சரிந்து செல்லும் தமது அரசியல் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைப் பயன்படுத்தி, அதாவது அவர்களது உணர்வுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும் இலங்கை அரசை திருப்திப்படுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு, மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயல்பாடுகள் தற்போது காணப்படுகின்றன. சுய லாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயல்பாட்டை சிதைக்கும் இவர்களது செயல்பாடு மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.

சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து, வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.